Namakkal

News March 17, 2024

நாமக்கல் மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

image

நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

நாமக்கல் மாநகராட்சியின் கூட்டம்

image

நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் முதல் சிறப்பு கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மாநகராட்சி தலைவர் கலாநிதி துணைத் தலைவர் பூபதி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

News March 16, 2024

நாமக்கல்: யோகாவில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் மாணவிகள்

image

சேலம் – பெரியார் பல்கலைக் கழக அளவிலான யோகாப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் அணிக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. யோகா வீராங்கனைகள் வீ. கார்த்திகா, வீ. கீர்த்தனா ஶ்ரீ, எம். மதுமிதா, ஏ. லீலாவதி, ஆர். கௌசல்யா மற்றும் ஆர் லாவண்யா ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

News March 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 68 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!