Namakkal

News October 24, 2024

நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை தீபாவளியை முன்னிட்டு விழிப்புடன் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசுகள் அளிப்பதாக தற்சமயம் மோசடி நடைபெறுகிறது. இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது பகிரவோ வேண்டாம். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடபடலாம் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார் 1930 அழைக்கவும் காவல்துறை கூறியுள்ளது.

News October 24, 2024

மோகனூர் மகளிர் கல்லூரியில் மருத்துவ முகாம்

image

மோகனூர் டிரினிடி மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் டிரினிடி மகளிர் மன்றம் நாட்டு நலப் பணித் திட்டம் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாமக்கல் தங்கம் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் மகளிர்க்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் இன்று கல்லூரியில் நடத்தியது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

News October 24, 2024

நாமக்கல்  வராஹி அம்மன் கோயிலில் அஷ்டமி பூஜை

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு வராஹி அம்மன் திருக்கோயிலில் அஷ்டமி நாளான இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News October 24, 2024

சிறப்பு மருத்துவ முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம், சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி ஒன்றியம் சரசு திருமண மண்டபத்தில் (26/10/2024) அன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இம்முகாமில் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

News October 24, 2024

நாமக்கல் மாணவர்கள் கவனத்திற்கு

image

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 6 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. தற்போது 24-25 ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை (30.10.24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 04286-299597, 267876, 267976, 94990-55844, 94990-55843 எண்களில் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களைப் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

நாமக்கல்லில் ஒரு நாள் இலவசப் பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 25ஆம் தேதி ‘பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி’ மற்றும் ‘நோய் நிர்வாகம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 04286-266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்ற எண்களை அணுகி பயன் பெறலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் எருமபட்டியில் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவ முகாமில் மாற்று திறனாளிகளுக்கு புதியதாக அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 23, 2024

நாமக்கல்லில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி, இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கோவிந்தராஜன் (9498170004), இராசிபுரம் – துர்க்கை சாமி (9498183251), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News October 23, 2024

நாமக்கலில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடியது. அதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணையின் கொள்முதல் விலை ரூ 5.25 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 என்ற நீடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 23, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

error: Content is protected !!