India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து வீணானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுங்சாலையில் முட்டைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாணது. இதில் ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின.

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஐப்பசி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்குவார். தங்களது படைப்புகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் Qtndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்தும், 30ஆம் தேதி வடமேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும். அடுத்த 5 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை உள்ளதா என கமெண்ட் பண்ணுங்க.

1.ராசிபுரம் அரசு கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது.
2.நாமக்கல்லில் வருகிற 29ஆம் தேதிஎம்எஸ்எம்இ தொழிற்கடன் மேளா நடைபெறுகிறது.
3.நாமக்கல்லில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.
4.மல்லசமுத்திரம் முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
5.நாமக்கல் பெண் விவசாயி பிரியா பயிர் விளைச்சலில் சாதனை படைத்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. அங்கு உள்ள மிகைப் பேராசிரியர்களை அரசு கல்லூரியில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரி நுழைவாயில் முன்பு வாயில் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழக அரசின் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் கடன் வசதிக்காக முகாம் வருகிற 29ஆம் தேதி நாமக்கல் கோஸ்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில்மையம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தாங்கள் தொழில் செய்ய தேவையான கடனுதவி வாய்ப்பு முகாமில் பெற்று தரப்படும்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா இன்று (25.10.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.புளியம்பட்டியைச் சேர்ந்த பிரியா அவர்களுக்கு ரூ.15,000/- க்கான காசோலையினை வழங்கினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – கதியா பேகம் (8903881428) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.