Namakkal

News October 27, 2024

முட்டை விலை நிலவரம்

image

நாமக்கலில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.25 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழையினால் ஏற்பட்ட குளிர் காரணமாக முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை மெல்ல மெல்ல உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.25 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 27, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூ விலை உயர்வு
2.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்பட்டு அலங்காரம்
3.பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் உமா அறிவித்துள்ளார்.
4.மரூர்பட்டி ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை நடத்தினர்
5. நாமக்கல்லில் நில முகவரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

News October 27, 2024

நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூ விலை உயர்வு

image

நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், சுற்றுவட்டார விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதன்படி இன்றைய பூக்கள் விலை விவரம், மல்லி ரூ.280, முல்லை ரூ.200, அரளி ரூ.60, சம்மங்கி ரூ.30, மஞ்சள் அரளி ரூ.100, செவ்வரளி ரூ.100, ஜாதிமல்லி ரூ.260, காக்கட்டான் ரூ.360, நந்தியாவட்டம் ரூ.60 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News October 27, 2024

ஆண்டாள் அலங்காரத்தில் குருசாமிபாளையம் மாரியம்மன்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

News October 27, 2024

தீபாவளி: பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் 

image

பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. தீபாவளி நாளில் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடங்களில் அதிக ஒலி இல்லாத, பசுமை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவித்துள்ளார்.

News October 27, 2024

நாமக்கல்: இன்று ரேஷன் கடைகள் செயல்படும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றி வந்த லாரி மதுராந்தகத்தில் கவிழ்ந்து ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து வீணானது.
2.எருமைப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
3.நாமக்கல்லில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கிய எம்பி
4.தங்க கவசத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5. நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகளாக உயர்ந்து ரூ.5.25க்கு விற்பனை ஆனது.

News October 26, 2024

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கோமதி (9498167680), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – நந்தகுமார் (9498170006), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News October 26, 2024

நாமக்கல்லில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்

image

தீபாவளியை முன்னிட்டு பேருந்து நிலைய கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படலாம். வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வணிகர்கள் தொழில் செய்ய ஏதுவாக வருகிற அக்டோபர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

News October 26, 2024

லாரி கவிழ்ந்து ஒரு லட்ச முட்டைகள் வீண்

image

நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து வீணானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுங்சாலையில் முட்டைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாணது. இதில் ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின.

error: Content is protected !!