India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் 5 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.35 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று 28ம் தேதி ரூ 5.30 விற்பனை செய்யப்பட்ட முட்டை இன்று 29ம் தேதி 5 காசுகள் உயர்ந்துள்ளது முட்டை விலை தொடர்ந்து இருந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், தற்போது சம்பா பருவத்தில், 12,494 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையில் இருந்து நெல் பயிர்களை பாதுகாக்க, மழையால் மண்ணில் இருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன், பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய, 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும் என நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறை சார்பாக அறிவுரை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (12.11.2024) அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுபோட்டிகள், நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். தகவல்களுக்கு 04286 – 292164 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1. தாளம்பாடியில் வெடி வெடித்து இனோவா சொகுசு கார் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
2.நாமக்கல்லில் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.
3.நாமக்கல் அருகே குரங்காத்துப் பள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
4.நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்.29ஆம் தேதி நடைபெற உள்ளது.
5.புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ ஈஸ்வரன்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), இராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – தங்க வடிவேல் (9750553762), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடியது. இதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ரூ.5.25 விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டையின் விலை தற்போது 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் அடுத்த தாளம்பாடியில் மூதாட்டி செல்லம்மாள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் இன்று துக்க நிகழ்வில் வெடி வெடித்த போது எதிர்பாராத விதமாக இனோவா காரின் டிக்கியில் மீதமிருந்த சரவெடி, வாணவெடி வெடித்ததில் இனோவா சொகுசு கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த வெடி விபத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குரங்காத்துப் பள்ளம் பகுதியில் தங்கராசு என்பவர் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தியபோது போலீசாரால் கைது செய்யபட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஊறல் அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் உள்ளிடோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் அக்.29ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கோரிக்கைகள் இருப்பின் இக்கூட்டத்தில் தெரிவிக்குமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.