Namakkal

News May 9, 2024

நாமக்கல் எட்டுக்கை அம்மன் கோயில் சிறப்புகள்!

image

நாமக்கல் கொல்லிமலையில் உள்ள மேல்கலிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது எட்டுக்கை மாரியம்மன் கோயில். இதை சுற்றி உயரமான சில்வர் ஓக் மரங்களும், காட்டுக் கொடிகளும் சூழ்ந்துள்ளது. இந்த எட்டுக்கை அம்மனை சிலர் கொல்லிப்பாவை என்றும் அழைப்பதுண்டு. கொல்லிமலையைக் காக்கும் தேவதையாக இங்கிருக்கும் அம்மனை பாவிக்கின்றனர். பூஞ்சோலை கிராமத்திலிருந்து நடந்தே இக்கோவிலுக்குச் செல்லலாம்.

News May 9, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

நாமக்கல் அருகே 3 குழந்தைகளை கடித்த நாய்

image

ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் இன்று காலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, 3 குழந்தைகளை கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

News May 9, 2024

நாமக்கல்:பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளரும் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன் அவர்கள் இன்று நாமக்கல் விருந்தினர் மாளிகையில்” மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உட்பட பலர் பங்கேற்றனர்.

News May 9, 2024

நாமக்கல்லில் மழை பெய்ய வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

நாமக்கல் அருகே நுங்கு விற்பனை அமோகம்

image

பரமத்தி வேலூர் பகுதியில் சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தனூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது. ஒரு நுங்கின் விலை ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

News May 8, 2024

நாமக்கல்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. இன்று நாமக்கல் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிளை சிறையின் தன்மை குறித்தும் கைதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர் கிளை சிறையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட கிளை சிறை காவல் துறை அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

News May 8, 2024

நாமக்கல்: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

image

நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு முகாம் 23- 24 கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் 13.05.2024 அன்று பாய்ச்சலில் உள்ள பாவை கல்லூரியில் 2, 000 மாணவ, மாணவியர்களுக்கும் 15.05.24 அன்று குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் 1,000 மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற உள்ளது.

News May 8, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

News May 8, 2024

பசுமை குடிலை பார்வையிட்ட நாமக்கல் ஆட்சியர்

image

நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில், பொதுமக்கள் கோடை வெயிலில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!