India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர் கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பாய்ச்சலில் நடைபெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம்,கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்ச்சி தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி டிப்ளமோ பெற்ற மாணவர் மாணவியர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.10.05.24 முதல் 7.6.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 -ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற் படிப்பு, டிப்ளமோ படிப்பு& பட்ட மேற்படிப்புகளில் முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்காக உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயன்படலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அதற்கான சான்று பெற்றிட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில்& https://exwel.tn.gov. உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தோ இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவைவிடம் அருகே முதலைப்பட்டி பகுதியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த புதிய பேருந்து முனையம் தற்போது தயார் நிலையில் உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், புதிய பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் பகுதியில் கடந்த வாரம் பீன்ஸ் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் வரத்து குறைந்து வருவதை விலை அதிகரிக்க காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ் விலை உயர்த்தியுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் வார இறுதி நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். அந்த வகையில் நேற்று 20 டன் காய்கறிகள் மற்றும் 4.75 டன் பழங்கள் என மொத்தம் 24.75 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,230 பேர் வாங்கி சென்றனர்.
Sorry, no posts matched your criteria.