India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை வரும் 14.05.24 முதல் 17.05.24 வரை நான்கு நாட்களுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளரும், மேற்கு மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளரும், ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.16,002 முதல் ரூ.19,705 வரையிலும், உருண்டை ரகம் குவிண்டால் ரூ.14,827 முதல் ரூ.17,042 வரையிலும், பனங்காலி ரகம் குவிண்டால் ரூ.21,384 முதல் ரூ.26,899 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,150 மூட்டை மஞ்சள் ரூ.95 லட்சத்துக்கு ஏலம் போனது.
கொல்லிமலை சோளக்காடு பழங்குடியினர் சந்தையில், வரத்து குறைவால் பலாப்பழங்கள் விலை உயர்வடைந்துள்ளது. தற்போது மலைப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலாப்பழம் சோளக்காடு பழங்குடியினர் சந்தை மற்றும் தெம்பலம் ஆகிய 2 சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறிய ரக பலாப்பழம் ரூ.170-க்கும், சற்று பெரிய ரக பலாப்பழம் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
24-25ம் கல்வி ஆண்டில் கல்லூரிகளில் கலை அறிவியல் தொழிற் பட்ட பட்டப்படிப்புகள் மேற்படிப்பில் முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கான உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடைய சார்ந்தோர் சான்று பெற்றிட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் மூலமோ ஆவணங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் நாமக்கல் மாவட்டம் 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.88% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.27 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.91 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன.அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் 90.36% பேரும், மாணவியர் 94.76 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.58% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக இருந்து வந்த நிலையில்,நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.60 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.134-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
எருமப்பட்டி அடுத்த செவ்வந்திப்பட்டி ஆட்டு சந்தையில், ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.நேற்றைய ஆட்டுச்சந்தையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று வருவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.இதனால் ஆடுகள் ரூ.43 லட்சத்துக்கு விற்பனையானது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் அடுத்த வெண்ணந்தூருக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்
இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி 2023-2024 கல்வியாண்டில் ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக நடைபெற்றது. இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் இந்த கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் மற்றும் ஆசிரியை பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.