India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கு வரும் 24.03.2024 ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கே.பி ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து அதே கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது
உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தல் 24 நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் 24/7 நடைபெற்று வருகிறது நாமக்கல் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நடைபெற்றது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மரு.ச.உமா கலந்து கொண்டார்.
2024 மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வேண்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் 2024 தேர்தல் தொடர்புடைய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 24ல் 100 சதவிகித வாக்குபதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட உள்ளது.
நாமக்கலில் 19ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.