Namakkal

News May 19, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று மே 19-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நாமக்கல்லில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே கொல்லிமலை சுற்றுலா பகுதிகளில் உள்ள அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவைப் பொறுத்து மறு அறிவிப்பு வெளியாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை

image

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத் தாளாளர் இல்லம் அவரது மருமகன் வீடு அவருடைய தொடர்புள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதால் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது

News May 18, 2024

நாமக்கல் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு பரவலா?

image

தமிழகத்தில் மே மாதத்தில் 15 நாட்களில் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் டெங்கு மதிப்பில் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர்.

News May 18, 2024

நாமக்கல்: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 18, 2024

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட புதிய தகவல்

image

மாற்றுத்திறனாளிகள் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் 5 வருட காலத்திற்கு பெறப்படும் வட்டியில்லா கடன் தொகையினை திருப்பி செலுத்தி பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த தகவல்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அறை எண்:06 தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது தொலைபேசி எண்:04286-280019 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு ச.உமா நேற்று தெரிவித்துள்ளார்.

News May 17, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு அயல் நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்த, தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் (63791 79200) மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News May 17, 2024

நாமக்கல்: டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி

image

நாமக்கல் நகராட்சியில், டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்து உறுதிமொழி வாசித்தார். இதில் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

நாமக்கல்: மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் நாமக்கல்லில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழை

image

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்ததையடுத்து இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது.

error: Content is protected !!