India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அறையின் மேல்தளத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது.அந்த பகுதியில் தேனீக்கள் கூடு கட்டுவதும்,தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வழக்கமாகும்.ஆனால் தற்போதைய தேன்கூடு பெரிய அளவிலும்,வெயில் அடிக்கும்போது வெப்பம் தாங்காமல் கலைந்து சென்று மக்களைத் தாக்குகிறது.]. இதனால் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது
வரும் சனிக்கிழமை 25.5.24 அன்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கமும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ முனையும் இணைந்து மருத்துவ முகாம் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து விதமான உடல் பரிசோதனைகள் செய்து கொண்டு தேவைப்படுபடுவர்களுக்கு குறைந்த விலையில் அறுவை சிகிச்சைகள், ஓரிருவருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அக்னி வெப்பம் மக்களை வாட்டி கொண்டு உள்ளது இதனிடையே நாமக்கல் மாவட்டம் மற்றும் நகரத்தில் ஆங்காங்கே மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனிடையே அதிமுக நாமக்கல் நகர கழகம் மற்றும் 35-ஆம் வார்டு செயலாளர் ராஜசேகர் இணைந்து 24-ஆம் நாளாக பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
வருகின்ற 25/05/24 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் எம்.ஜி.எம் நிறுவனம் இணைந்து 32வது ஆண்டாக இம்முகாமை நடத்துகிறது. இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கும் இடம், உணவு, கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.
நாமக்கல், திருச்செங்கோடு பகுதியைச்சேர்ந்த அன்னைத்தமிழ் ஆண்கள் அணி நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூாில் 19.05.2024, 20.05.2024 நடந்த கபாடி போட்டியில் இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் அன்னைத்தமிழ் பரிசை வென்றது இரண்டாவது பரிசு திண்டுக்கல் அணி வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறிய கூட்டரங்கில் இன்று காலை வாக்கு இன்னும் மைய அலுவலருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது
புதுச்சத்திரம் அருகே ரெட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்,மகன் கவின் குமார் நேற்று முன்தினம் காலை குளித்துவிட்டு வந்து,அவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை ஈரமான கையுடன் தொட்டு,ஆப் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.அவரை மின்சாரம் தாக்கியது.தூக்கி வீசப்பட்ட கவின்குமாரை பெற்றோர் காப்பாற்றி சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) ஜி.பரிமளா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் காலங்களில் மின் சாதனங்களைப் பயன்படுத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் குறிப்பாக மின்சாதனங்கள் அருகில் செல்லும் சிறுவர்களை கண்காணிக்க வேண்டும் அலட்சியமாக செயல்படக் கூடாது. குறிப்பாக, வீடுகளில் பழுதான மின்சார பொருள்கள் இருந்தால் உடனடியாக மாற்றி விட வேண்டும் என கூறியுள்ளார்
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அந்த வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.141-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.144 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 580 காசுகளாகவும், முட்டை கோழி விலை ரூ.103 ஆகவும் உள்ளது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.