Namakkal

News May 23, 2024

கொல்லி மலை: ஒரு கிலோ மிளகு ரூ.620க்கு விற்பனை

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பல நூற்று கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மிளகு நேற்று(மே 22) நிலவரப்படி ஒரு கிலோ ரூ.620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மிளகு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இதன் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கும் என மிளகு பயிரிட்டுள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

News May 22, 2024

நாமக்கல் அருகே நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

image

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மே மாத தொடக்கத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தொடர் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியான பிள்ளாநல்லூர் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 22, 2024

நாமக்கல் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

7 மணி நேரம் தரிசனத்திற்கு தடை

image

நாமக்கல் நகரில் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது கோயிலில் இன்று நரசிம்ம சுவாமி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு 22.05.24 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூலவர் தரிசனம் நிறுத்தப்பட்ட உள்ளது.அதன் பின்னர் மீண்டும் மாலை 6.30 மணி முதல் திருக்கோயில் பழக்க வழக்கப்படி மூலவர் தரிசனம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 22, 2024

நாமக்கல் கோட்டையின் சிறப்பு !

image

நாமக்கல்லில் அமைந்துள்ளது நாமக்கல் மலைக்கோட்டை 75 மீட்டர் உயரம் கொண்ட இக்கோட்டை ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் பாளையக்காரர் ராமச்சந்திரன் நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையில் ஒரு கோயிலும் மசூதியும் அமைந்துள்ளது. தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோட்டைக்கு நாமகிரி, சாலக்கிராமம் என்றும் வழங்கப்படுகின்றது.

News May 22, 2024

நாமக்கல் அருகே விபத்து; மரணம் 

image

பரமத்தி வேலூரை சேர்ந்த ராஜு.திருச்செங்கோட்டில் தனியார் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் நல்லூர் முசல்நாய்க்கன்பட்டி பாளையம் பகுதியில் சென்ற போது லாரி மோதியது.காயமடைந்த ராஜுவை அங்கிருந்தவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அதற்கு முன்னர் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News May 22, 2024

நாமக்கல் அருகே விபத்து; மரணம் 

image

பரமத்தி வேலூரை சேர்ந்த ராஜு.திருச்செங்கோட்டில் தனியார் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் நல்லூர் முசல்நாய்க்கன்பட்டி பாளையம் பகுதியில் சென்ற போது லாரி மோதியது.காயமடைந்த ராஜுவை அங்கிருந்தவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அதற்கு முன்னர் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News May 22, 2024

நாமக்கல்:விதை விற்பனை நிலையங்களில் இணை இயக்குநா் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதைகள் ஆய்வு இணை இயக்குநா் ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விதை விற்பனை இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். தனியாா் விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல் மற்றும் விற்பனைப் பட்டியல் பராமரிக்கப்படுகிறதா? என்பதை பாா்வையிட்டாா்.

News May 21, 2024

நாமக்கல்லில் 16 செ.மீ மழைப்பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சத்திரம் பகுதியில் 16 செ.மீட்டரும், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் 11 செ.மீட்டரும் ராசிபுரத்தில் 10 செ.மீட்டரும் எருமைப்பட்டி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும் திருசெங்கோடு, மங்கல்புரம், ராசிபுரம் ARG ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

நாமக்கல்: தக்காளி 4 கிலோ ரூ.100க்கு விற்பனை

image

தர்மபுரி- கிருஷ்ணகிரி ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகமாக அங்கு பயிர் செய்யப்படுகிறது. அதிகமாக பயிர் செய்யப்படுவதன் காரணத்தால் தக்காளி விலை குறைந்துள்ளது.இதனிடையே நாமக்கல் மாவட்ட வியாபாரிகள் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகளை வாங்கி வந்து நாமக்கல் நகர பகுதிகளில் வாகனத்தில் வைத்து 4 கிலோ ரூ.100 என அளவில் விற்பனை செய்கின்றனர். இது இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!