Namakkal

News April 10, 2024

நாமக்கல்: வானதி சீனிவாசன் நாளை வருகை

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான ,வானதி சீனிவாசன் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, நாளை திருச்செங்கோடு, குருசாமிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 10, 2024

நாமக்கல்: திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வழியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தலைமையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 10, 2024

நாமக்கல்: உயா்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு

image

நாமக்கல், ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனத்தில்பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவா் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தாா். விழாவில் சென்னை டாக் சாப் அகாதெமியின் முதன்மைச் செயல் அலுவலரும், ஊக்குவிப்பு பேச்சாளருமான சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இதில், 1500 -க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

News April 10, 2024

நாமக்கல் வானிலை நிலவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 107.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி ஆகவும், காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

நாமக்கல்லில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

image

நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 2,900 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,750 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ.7,769 முதல் ரூ.8,400 வரையிலும், மட்ட ரகம் ரூ.4,499 முதல் ரூ. 6,295 வரையிலும் என மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனது.

News April 9, 2024

நாமக்கல்: ஆர்.எம்.விக்கு மலர் அஞ்சலி

image

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் மறைவையொட்டி நாமக்கல்லில் எம்ஜிஆர் கழகத்தின் மாஜி மாவட்ட செயலாளர் வெள்ளையன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் எம்ஜிஆர் கழக நிர்வாகி பழனி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

News April 9, 2024

நாமக்கல்: திமுக வெற்றி அடையும்

image

நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் செயலாளரும் தெரிவிக்கும் போது நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைவார் என ஈஸ்வரன் தெரிவித்தார் .மேலும் இந்திய கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார்

News April 9, 2024

நாமக்கல்லில் வெப்பநிலை அதிகரிப்பு

image

நாமக்கல்லில் வெப்பம் 40.0 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 9, 2024

நாமக்கல்லில் தொடங்கிய யுகாதி விழா

image

நாமக்கல் மாவட்ட நாடுகள் சங்கம் சார்பில் யுகாதி விழா நாமக்கல் எஸ் பி எஸ் மண்டபத்தில் இன்று தொடங்கியது.சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் யுகாதி விழா சிறப்பாக தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான நாயுடு சமூக மக்கள் கலந்து கொண்டுள்ளனர்

News April 9, 2024

உலக சுகதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

image

நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு ‘நோயற்ற வாழ்வு, நலமான வாழ்வு’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வீ.கோகிலா நம் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று மாணவிகளிடம் ஆலோசனை வழங்கினார்.

error: Content is protected !!