India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,91,67,955 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 52 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு ரூ. 1,44,91,265 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 21,50,82,357 மதிப்பிலான தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எலச்சிபாளையம் அருகே கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (43). எல்.ஐ.சி., முகவரான இவர் நேற்று இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வையப்பமலையில் இருந்து கொன்னையார் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் : சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கே.பொன்னுசாமி நேற்று காலை 6 மணியளவில் திடிர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேந்தமங்கலம்(எஸ். டி) சட்டபேரவையில் கடந்த 2021 திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தற்போது காரவள்ளியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்துவருகின்றார்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் அவர்கள், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஹர்ஜித் கவுர் அவர்கள் செலவின பார்வையாளர் அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது செலவின பதிவேடுகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி 100 % வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இந்திய இராணுவத்தில் பணியாற்றும் 390 வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோட்டில் நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி தொழில் வளர்ச்சிக்கு வெற்றி பெறப்போகும் எம்பியின் பங்கு குறித்த வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக தமிழ்மணி, திமுக மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி கனிமொழி, சுயேட்சை வேட்பாளர் டாக்டர் எழில் கலந்து கொண்டு லாரி தொழில் வளர்ச்சி குறித்து பேசினர்.
ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ராசிபுரத்தில், 2,105 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 1,982 பேர், என, மொத்தம், 4,087 பேர் உள்ளனர். அதில், 977 பேருக்கு, வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டு போடும் வகையில், ’12டி’ படிவம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில், பங்குனி மாதம் மூன்றாம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.