Namakkal

News November 14, 2024

நாமக்கல்: நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவ.21ஆம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

நாமக்கல்: குண்டு மல்லி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

image

நாமக்கல்: பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், சம்பங்கி கிலோ ரூ.140க்கும், அரளி கிலோ ரூ.200க்கும், ரோஜா கிலோ ரூ.280க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ.1,200க்கும், வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ.1,000க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ.200க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000க்கும் விற்பனையானது. உங்கள் பகுதியில் விலையை கமெண்ட் பண்ணுங்க.

News November 14, 2024

மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய ஊர் பொதுமக்கள்

image

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியில் குடியிருப்போர் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதியில் தங்கியுள்ளதாகவும், வெளியேறுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி,மீண்டும் அதே பகுதியில் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது.

News November 13, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிலவரம் 5.40 காசாக விலை நிர்ணயம்.
2. ஜனவரியில் கள் இறக்கி விற்பனை செய்ய முடிவு
3. நாமக்கல்லில் ஜனவரியில் கள் இறக்கி விற்பனை செய்ய முடிவு
4.விடுமுறை வேண்டி தேசிய சிந்தனைபேரவை தலைவர் கலெக்டருக்கு கோரிக்கை
5. நாமக்கல், கொல்லிமலை அறப்பளீஸ்வரர்கோயிலில், 3 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

News November 13, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை விலை உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு தலைவர் சிங்கராஜ் தெரிவிக்கும்போது மற்ற மண்டலத்தில் முட்டை விலை உயராமல் இருக்கும் காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டைவிலை எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். ஒரு முட்டை 5.40 காசாக விலை நிர்ணயம்.

News November 13, 2024

விடுமுறை வேண்டி கலெக்டருக்கு கோரிக்கை

image

திருச்செங்கோடு -ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. திருச்செங்கோடு மட்டுமில்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நிறைய பேர் தெப்ப தேர்த்திருவிழாவை பார்ப்பதற்கு வருவார்கள். எனவே வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய சிந்தனைபேரவை தலைவர் திருநாவுகரசு கோரிக்கை வைத்துள்ளார்.

News November 13, 2024

காணொலி மூலம் துவக்கி வைத்த CM

image

தமிழகத்தில் ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று(13.11.24) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில், நாமக்கல், கொல்லிமலை அறப்பளீஸ்வரர்கோயிலில், 3 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

News November 13, 2024

நாமக்கல்லில் 57வது தேசிய நூலக வார விழா

image

நாமக்கல் மாவட்டம் கிளை நூலகம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் போட்டித் தேர்வு பயிற்சி நூலக வாசகர் வட்டம் சார்பில் 57- வது தேசிய நூலக வார விழா நாளை(நவ.14) மாலை 5.15 மணியளவில் போட்டித் தேர்வு பயிற்சி நூலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

News November 13, 2024

இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

image

நாமக்கல், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கு காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். கொல்லிமலை அறப்பளீஸ்வரர்கோயிலில், 3 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை (13/11/24) காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடைபெறுகிறது. 

News November 13, 2024

குற்ற செயல்களை தடுக்க உடனே அழைக்கவும்

image

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் 136 பெண் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு “போலீஸ் அக்கா திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக 1091, 181 பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1098, 1930 சைபர் குற்றங்களுக்கான கட்டணமில்லா 24 மணி நேரமும் செயல்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!