Namakkal

News June 4, 2024

நாமக்கல்லில் அதிமுக முன்னிலை

image

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் அதிமுக- 24,018 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் திமுக-22,929, மூன்றாவது இடத்தில் பாஜக-5,032 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

நாமக்கல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

ELECTION: நாமக்கல்லில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தொகுதியில் மொத்தம் 78.16% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் கவிமணியும், பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019இல் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் 23.47% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட காளியப்பன் 265,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் மாதேஷ்வரனும், அதிமுக சார்பில் கவிமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?

News June 3, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் பூந்துறையை சேர்ந்தவர் சரவணகுமார் (50) சமையல் தொழிலாளியாக உள்ளார். இன்று அதிகாலை காடச்சநல்லூர் பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி, செல்வி வந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் கடைக்கு செல்வதற்காக காடச்சநல்லூர் பிரதான சாலை பகுதிக்கு சரவணகுமார் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News June 3, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 2024ம் ஆண்டு ஜீன் 10 முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார். 

News June 3, 2024

நாமக்கல் அருகே 10 பேர் மருத்துவமனையில் அனுமதி 

image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அரசபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்துள்ளது. திடீரென கூடு கலைந்ததால் , தேனீக்கள் சாலையில் சென்ற நபர்கள், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நபர்களை கொட்டியது. இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News June 3, 2024

நாமக்கல்:சமூக ஆர்வலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

image

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் தன்னார்வலர் அமைப்பானது, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு, SRPO நிறுவனர் /தலைவர் P.வடிவேல் அவர்கள் மரக்கன்றுகள் வழங்கினார். நாமக்கல் மண்டல செயலாளர் S. நடராஜ், மண்டல பொறுப்பாளர் V. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

வாக்கு எண்ணிக்கைக்கு நாமக்கல் தயார் என ஆட்சியர் தகவல்

image

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில், தலா 17 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என மொத்தம் ஒரு சட்டசபை தொகுதிக்கு 51 பணியாளர்கள் வீதம் 102 தேர்தல் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு தயார்.

News June 1, 2024

பழுது நீக்கும் கடைகளில் குவியும் சைக்கிள்கள்

image

ஜூன் 10ம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ,பள்ளி செல்வதற்கு மாணவ மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் பெண்கள் பள்ளி அருகே செயல்படும் , சைக்கிள் கடைகளில் அரசு பள்ளி மாணவ மாணவியர் பயன்படுத்தி வரும், விலையில்லா சைக்கிள்களை பழுது நீக்கி தர கோரி சைக்கிள்களை கொடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!