India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

1) இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல்லில் காலை 11.30க்கு ஆர்ப்பாட்டம். 2) பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறுகிறது. 3) நாமக்கல் கவிஞர் பேரவை சார்பில் நேரு பிறந்த நாள் சேவையாளருக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.4) நாமக்கல்லில் பல்வேறு பகுதியில் மழை.

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.நாமக்கல்லில் கார்த்திகை மாதம் தொடக்கம் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்
3.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் அணிவிப்பு
4.நாமக்கல் மாவட்டதில் பல்வேறு இடங்களில் கொட்டிய மழை
5.நாமக்கல்: சாலை விபத்தில் மூவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 16ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் இன்று நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனைக்கு தேவையான 30 போர்வைகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்.

நாமக்கல், பரமத்திவேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த சிவா, பூமேஷ், சிறுகிணத்து பாளையம் சேர்ந்த சக்திநாதன் மூன்று பேரும் ஈரோட்டில் இருந்து அசோக் லைலாண்ட் தோஸ்த் வாகனத்தில் கபிலர்மலை நோக்கி வந்த போது தண்ணீர் பந்தல் அருகே சாலையின் எதிரே வந்த லாரியில் மோதி மூன்று பேர்களும் பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

நாமக்கல் நகரின் மத்தியில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இதனிடையே இன்று 16ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி வழிபட்டனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 15 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கொட்டிய கனமழை
3. பரமத்தி வேலூரில் மின் தடை அறிவிப்பு
4. திருச்செங்கோட்டில் 9ஆவது மாபெரும் இரத்ததான முகாம்
5.ஆனங்கூர் பகுதியில் நாளை மின் தடை
6.சேந்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Sorry, no posts matched your criteria.