India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரி, இரவு வெப்பம் 73.4 டிகிரி அளவுகளில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பன்முக திறமைகள் புரிந்த நபர்களுக்கான “பத்ம விருது” குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விருதுக்கு தொலைபேசி எண்.04286-299460 என்ற அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் இன்று (ஜூன் 11) சங்க வளாகத்தில் நடைபெற்றது. ஆர்.சி.ஹெச் ரகம் 2150 ரூபாய் முதல் 8100 ரூபாய் வரையும், மட்ட ரகம் ரூ.4229 முதல் 4935 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. சங்கத்திற்கு மொத்தம் 470 பருத்தி மூட்டைகள் ரூ 11.50 லட்சத்திற்கு ஏலம் போனது.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் , நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகம் முழுக்க டி என் பி எஸ் சி தேர்வு 9 ந் தேதி நடைபெற்ற நிலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட மையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ச.உமா பார்வையிட்டார்.மாவட்டத்தில் 174 மையங்களில் 51433 பேர் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன நாமக்கல் மாவட்டம் முழுவதும் 41278 பேர் தேர்வு எழுதினர் 10137 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை
,நாமக்கல்லில் நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 60 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசில் இருந்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்சமாக 60 காசுகள் வரை, முட்டை விலை உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்பு மாணவிகள் சோ்க்கை சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 26 மாணவிகள் சோ்க்கை பெற்றனா். வணிகவியல், பொருளியல் துறைகளுக்கு முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
மத்திய இணைச் இணைய அமைச்சராக டாக்டர் எல்.முருகன் இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகரத்தின் சார்பாக நாமக்கல் நகரத் தலைவர் சரவணன் டெல்லிக்கு இன்று நேரில் சென்று டாக்டர் எல்.முருகன் அவர்களை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி துவக்க நாளான, அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று மிட்டாய் கொடுத்து வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தங்கராஜ் மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் பங்கேற்றனர். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என, மாணவ மாணவியரை இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
நாமக்கல் ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மாணவ மாணவியர் நலம் பெறும் வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும், பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு திட்ட முகாமானது, நாமக்கல் மாவட்டத்தில் 17 பள்ளிகளில் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற உள்ள இந்த முகாமின் மூலமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன் பெற உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.