India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 440 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.127-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பதினான்கு லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 493 பேர் வாக்களிக்கவில்லை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 79.99,% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் 78.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாமக்கல்லில் இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, டாஸ்மாக் கடை விடுமுறையால் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அதிகளவில் மது பாட்டில்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.இதனால், விடிந்ததும், ‘குடி’மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து ப.வேலுார் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஒரு கிலோ பீன்ஸ் குறைந்தபட்சமாக ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே வரத்து குறைவு காரணமாக விலை உயர்வடைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்
நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முத்திரையிடப்பட்டு கல்லூரியில் 310 சிசிடிவி எல்இடி தொலைக்காட்சி மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட்டாட்சியர் துணை ராணுவத்தினர், போலீசார் என 249 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் குட்டநாடு பகுதியில் உள்ள, வாத்து பண்ணைகளில், ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளன.
நாமக்கல் மக்களவை தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகள் எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர் ச. உமா, தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி 117° வெயில் வாட்டி எடுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடலில் நீரிழப்பு அதிகம் இருப்பதால் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பாக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ஏப் 19 காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுற்றது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். அதில் சங்ககிரி 81.75, திருச்செங்கோடு 75.75, பரமத்தி வேலூர் 77.26, ராசிபுரம் 81.59, நாமக்கல் 74.32, சேந்தமங்கலம் 78.08 வாக்குகள் பதிவாகி உள்ளது . 6 சட்டமன்ற தொகுதியின் மொத்த சராசரி 78.16 சதவீதமாகும்.
Sorry, no posts matched your criteria.