Namakkal

News April 25, 2024

நாமக்கல்: ஆண் சடலம் மீட்பு!

image

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக இன்று காலை குமாரபாளையம் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தகவல் கூறினர். இது குறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி யார்? எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 25, 2024

நாமக்கலின் தனித்துவமான வளைவுகள்!!

image

1300 மீ உயரமும், 300 கிமீ நீளமும் கொண்ட கொல்லிமலை, 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான இந்த வளைவுகள் 46.7 கிமீ நீளம் கொண்டவை. இந்தியாவின் நீண்ட கொண்டைஊசி வளைவு சாலை இதுவே. மலையின் உச்சியில் ஆகாய கங்கை அருவியும், சிவன் கோவிலும் உள்ளது. இந்த வளைவினாலேயே இம்மலை, ‘மரணத்தின் மலை’ என்றொரு பெயரும் பெற்றுள்ளது. வாகனம் ஓட்டுவதை நேசிப்பவர்களுக்கு ஏற்ற சாலையாகவும் உள்ளது.

News April 25, 2024

நாமக்கல் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 27 முதல் மே 8 வரை நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59 செலுத்தி நீந்தலாம்.
மேலும் விபரங்களுக்கு பயிற்சியாளர் சிங்குதுரையை  8508641786 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

News April 25, 2024

நாமக்கல்: கல்லூரியில் கல்லூரி கனவு குறித்த கருத்தரங்கு

image

ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர்.

News April 25, 2024

நாமக்கல்: போதிய தண்ணீர் அருந்துங்கள் ஆட்சியர் தகவல்

image

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 24.4.24 ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும்,தேவையின்றி மதியம் 12-3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமாயின் மருத்துவரை அணுகுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

பேருந்துகளை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது

image

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு சாலையில் 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அறிவிப்பு வராத நிலையில், இரவு நேரத்தில் விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்ததால், பொதுமக்கள் நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்றை சிறை பிடித்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: போக்குவரத்து துறை உத்தரவு

image

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் பகுதியில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகனங்கள் நிற்பதில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது ஆட்டையாம்பட்டி பிரிவில் நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

நாமக்கல்: நீச்சல் பயிற்சி பலர் ஆர்வமுடன் பங்கேற்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் வெயில் தாக்குவதால் மக்கள் இளநீர், நுங்கு, பழச்சாறு, மோர் அருந்தி தங்களை வெப்பத்திலிருந்து காத்து வருகின்றனர்.அது போக மூன்று வேளையும் குளிர்ந்த நீரில் குளித்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரசாங்கத்திலும் நீச்சல் குளத்தில் கோடைக்கால 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

News April 24, 2024

நாமக்கல்: மின்னணு இயந்திரங்கள் அறையில் ஆய்வு

image

திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் நடத்தும், அலுவலருமான மருத்துவர் உமா அவர்கள் இன்று பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 24, 2024

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். ஆய்வின் போது ஆட்சியர் மரு.ச.உமா உள்ளிட்டோர் மாஸ்க் அணிந்திருந்தனர்.

error: Content is protected !!