India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (25-11-2024) நிலவரப்படி, கறிக்கோழி (உயிருடன்) விலை கிலோ ரூ.73-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனையாகி வருகின்றது. முட்டை விலையைப் பொறுத்தவரையில், பண்ணை கொள்முதல் விலை ரூ.560-ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த 4 நாட்களில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என இன்று காலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீசார் சோதனை செய்தனர். அதன்படி திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்திற்கு அருகிலும், எதிரிலும் 20-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.500 முதல் ரூ.550 வரை விற்பனையான நாட்டுக்கோழி நேற்று நடைபெற்ற சந்தையில் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது.பண்ணைகளில் நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 350 க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ. 300 வரை விற்பனையானது

1.நாமக்கல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.11.2024 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
2.நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.60 விற்பனை
3. கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைவு
4.நாமக்கல் மாவட்டத்தில் இன்று அனைத்து வார்டுகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
5.திருச்செங்கோடு கலைஞர் நூலகம் திறப்பு விழா

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – சுரேஷ் (9788015452, திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று 24ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காலநிலை காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்ததால், 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகியின் நூற்றாண்டு விழா நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டி மேற்கு ஒன்றியம் அலங்காநத்தம் பிரிவில் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகி ஸ்ரீதேவிமோகன் தலைமையில், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கலில் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து செல்ல வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாமக்கல் இராசிபுரம் நகராட்சி கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 24-25இன் கீழ் ரூ10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், ராசிபுரம் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.
Sorry, no posts matched your criteria.