Namakkal

News July 2, 2024

மாவட்ட அளவிலான போட்டி; முதல் பரிசு ரூ.10,000

image

நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஜூலை 9 காலை 9.30 முதல் ‘ஆட்சிமொழி தமிழ்’ தலைப்பில் கட்டுரை போட்டி, குமரி தந்தை மார்ஷல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.

News July 2, 2024

நாமக்கல்: விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்கல்வித் துறையின் அறிவியல் நகரம் மூலம் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.scienceciteychennai.in & www.namakkal.nic.in தளங்களில் பெற்று, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முகவரிக்கு 10.7.24க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 1, 2024

மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 549 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண்துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News June 30, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News June 30, 2024

நாமக்கல்: ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியில் சேர வாய்ப்பு

image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான நேர்முக நேர்காணல் வருகின்ற 2ஆம் தேதி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஓட்டுநர்கள் தங்களது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

முன்னாள் முதல்வரை சந்தித்த நாமக்கல் எம்.பி.

image

உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவை, நாமக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மற்றும் இந்நாள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

News June 28, 2024

போதை ஒழிப்பு குழு கலந்தாய்வுக்கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமைக்காவலர் அலுவலகத்தில் நேற்று(ஜூன் 27) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணண் தலைமையில் நாமக்கல் மாவட்ட போதை ஒழிப்புக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News June 27, 2024

போதை ஒழிப்பு குழு கலந்தாய்வுக்கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமைக்காவலர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 27) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணண் தலைமையில் நாமக்கல் மாவட்ட போதை ஒழிப்புக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News June 27, 2024

மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

image

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிஜா சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற ஜவுளித்தொழில் மிகவும் நலிவடைந்து வருவதால் இத் தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளை கோவைக்கு அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!