India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலராக மரகதம் இன்று நாமக்கலில் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மரகதத்திற்கு நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வலரும் பசுமை தில்லை சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கலுக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாமக்கல், திருச்செங்கோட்டில் மே தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தின ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினர். நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், திருச்சங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில், கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள 7 சிவ தலங்களுள் ஒன்றாகும். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் சிவன், பாதி பெண்ணாகவும், மீதி பாதி ஆணாகவும் இருக்கும் அர்த்தநாதியாக காட்சியளிக்கிறார். 1200 படிகள் கொண்ட இத்தலத்தில் சம்பந்தர் தேவாரம் பாடியுள்ளார். மிகவும் தொண்மையான இக்கோவில் அமைந்துள்ள திருச்செங்கோட்டின் புராண பெயர் திருக்கொடிமடச்செங்கோண்டுரூர் ஆகும்.
திருச்செங்கோடு அருகே உள்ள பணங்காட்டுபாளையம் என்ற இடத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 7 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கராஜ்(38)என்பவரை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மையார் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. 34 ஆவது நாள் மண்டல அபிஷேக பூஜையில் மூலவர் ஸ்ரீ பார்வதி அம்மையார் மற்றும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே நினைவுச் சின்னத்தின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை தனது சொந்த செலவில் தயவு செய்து கொடுத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை கோழி கிலோ ரூ.90 ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.124 ஆகவும் விற்பனையாகின்றது . கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்துள்ளது.
நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலத்தில், மாவட்ட ஆட்சியா் ச. உமா நேற்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநின்ற, பள்ளி செல்லாத மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.