India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் கடந்த 30 ஆம் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சண்முகநாதன் மற்றும் அவரது மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் நதியாவின் மகன் பகவதி விஷம் வைத்தது தெரியவந்தது. இதில் முதியவர் சண்முக நாதன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்ற மகனே தாய்க்கு விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரில் கடந்த ஆண்டு நீர் இருப்பை விட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் அணையை தூர்வாரினால், அணையின் நீர் கொள்ளவை அதிகரித்து, தென்மேற்கு பருவமழை காலங்களில் கூடுதலாக நீரினை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்னி வெயில் 4ம் தேதி தொடங்குகிறது. அதிலிருந்து பாதுகாத்து கொள்ள நாமக்கல் நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.இதனை ஒட்டி நாமக்கல் கடை வீதியில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பாக தென்னை ஓலையில் வேயப்பட்ட படலங்கள் மற்றும் நிழல் விலைகளையும் அமைத்து வருகின்றனர்.இதனால் தங்கள் கடைக்கு வரும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதால் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு கவனமாக செயல்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். மேலும், பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.
சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் மே 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அந்த வகையில், முகாமானது, 9ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம் செண்பகமாதேவி, 16ஆம் தேதி வெண்ணந்தூா் ஒன்றியம் அக்கரைப்பட்டி, 23ஆம் தேதி சேந்தமங்கலம் ஒன்றியம் பள்ளம்பாறை, 30ஆம் தேதி கபிலா்மலை ஒன்றியம் இருக்கூா் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நேற்று(மே 2) மாவட்ட கூட்டரங்கில் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் வளர்ந்துவரும் தொழில்துறையில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி, இலவச திறன் பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று மாலை மாவட்ட அளவிலான தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தொடர்ந்து கோடை வெயிலால் மாவட்டத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தீ விபத்தும் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
Sorry, no posts matched your criteria.