Namakkal

News July 14, 2024

காளான் வளர்ப்பு பயிற்சி தேதி மாற்றம்

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 16.07.24 முதல் 21.08.2024 வரை 25 நாட்கள் நடக்கவிருந்த சிறப்பு பயிற்சியானது ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது, “காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் நடைபெற உள்ளது.

News July 14, 2024

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள் 

image

இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுகுறிச்சியில் “மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. நிகழ்வில், அமைச்சர் ம.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆட்சியர் S. உமா ஆகியோர் கலந்துகொண்டனர். உடன், அரசு துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் இருந்தனர்.

News July 14, 2024

நாமக்கல் குரூப்-1 தேர்வு நிலவரம்

image

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 5,768 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 18 தேர்வு மையங்களில் மொத்தம் 4,188 பேர் எழுதினர். சுமார் 1,580 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து, பொரசப்பாளையம் ஸ்ரீ விநாயகா மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டித்தேர்வை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 13, 2024

நாமக்கல்லில் சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தலைமையில் இன்று 13ஆம் தேதி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் நாமக்கல் மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் சுமார் 500 காவலர்கள் 100 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

நாமக்கல்லில் தற்காலிக கருத்தடை செய்ய ஏற்பாடு

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜுலை.11 முதல் 24 ஆம் தேதி வரை அனைத்து வகை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர கருத்தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை சிகிச்சை, கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி, சாயா கருத்தடை மாத்திரைகள் வழங்குதல் போன்றவை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

News July 13, 2024

நாமக்கல்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

image

எருமப்பட்டி ஒன்றியம் தூசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணிரால் நிரம்பி வந்தது. நாமக்கல் நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீரின் ஒரு பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் அப்படியே வெளியேறுவதால் தூசூர்ஏரி மாசடைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

News July 13, 2024

நாமக்கல்: 1000 ஏக்கரில் மண்ணுயிர் காப்போம் திட்டம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் பகுதியில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார். மேலும், நிகழ்வில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினார்.

News July 13, 2024

நாமக்கல்: 5 நாட்களுக்கான வானிலை வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யும். பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கிலிருந்து மணிக்கு 19 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 12, 2024

காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் உத்தரவின் படி இன்று காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு மாவட்டத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ள அதிகாரிகளுக்கு அனைவருக்கும் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கை துப்பாக்கியை கையாளுவது மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

News July 12, 2024

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிய அமைச்சர்

image

நாமக்கலில், அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கலையரங்கில் ஆட்சியர் உமா தலைமையில் அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் நேற்று கையடக்க கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 2,220 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ரூ 2.83 கோடி அமைப்பில் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!