India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையம் சார்பில் கீழ்க்கண்ட நாட்களில் ஆலோசனை வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகராட்சி – ஜூலை 16,23, திருச்செங்கோடு நகராட்சி – ஜூலை 18 &19, குமாரபாளையம் நகராட்சி – ஆகஸ்ட் 13,14 , மோகனூர் பேரூராட்சி – ஆகஸ்ட் 24, 25, பட்டணம் பேரூராட்சி ஆகஸ்ட் 5, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே வரும் 22ம் தேதி மாலை பாஜகவின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார் . இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை மத்திய பிரதேசத்திலிருந்து 2500 டன் கோதுமை வந்தது. தொடர்ந்து, இவை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு வழங்குவதற்காக லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. மேலும், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கோழி தீவனம் மற்றும் ரேஷன் கடைக்கான அரிசி ஆகியவை வெளி மாநிலத்திலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் அவர்களின் கனவான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் முதலமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த ஆணைகளை எம்.பி. கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினர்.
கர்நாடகா அணைகளில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. ஆனால் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு 8,000 கன அடி தண்ணீர் தான் காவிரியில் திறக்க முடியும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தண்ணீர் திறப்போம் என மாநிலத் தலைவர் வேலுச்சாமி இன்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியை திமுக படுதோல்வியடைய செய்தது. இந்நிலையில், நாமக்கல் சேந்தமங்கலம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது நாமக்கல் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் <
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என். புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நாளை 15ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிப்காட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என சிப்காட் எதிர்ப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.