India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று இராசிபுரம் சாந்தி இன் கிராண்ட் கோல்டன் காலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக காந்தியவாதி இரமேஷ் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 92 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.119- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.122 ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல், வலையபட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று இணைந்து உழவாரப் பணி மேற்கொண்டனர். இதன் முதல் தொடக்கமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் நேற்று (ஏப்.26) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நாமக்கல் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 104.9 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 68.9 டிகிரி பாரன்ஹீட்டாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், நீட் தோ்வை 11 மையங்களில் 8 ஆயிரம் மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.நீட் தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.நிகழாண்டில் + 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள்,வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் ஆயிரம் போ் கூடுதலாக மொத்தம் 8 ஆயிரம் போ் நீட் தேர்வு எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி, வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நேற்று (ஏப்.25) 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் நாமக்கல்லில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயருக்கு காலை பஞ்சாமிர்தம், தேன், பால் தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர், சிறப்பு அலங்காரமாக முத்தங்கி சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46°C வரை வெப்ப அளவு பதிவாகக்கூடும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.