India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் (26/12/2024) அன்று காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் விண்ணப்பங்களை (12/12/2024) தேதிக்கு முன்னதாகவே அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.85 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ. 5.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று (3-12-2024) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (4-12-2024) காலை முதல் அமலுக்கு வருகிறது. தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இது முறை என்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

➤டிசம்பருக்கான மின்நுகர்வோர் குறைதீர் முகாம் ➤நாமக்கல்லில் நிரம்பி வழியும் தடுப்பணைகள் ➤வெள்ளப்பெருக்கை ஆய்வு செய்த கலெக்டர் ➤திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ➤கொல்லிமலையில் மண் சரிவு ➤நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்பு ➤இருசக்கர வாகனத்தில் புகுந்த பரபரப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை), பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 11ஆம் தேதியும், திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதியும், பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 21ஆம் தேதியும், ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 26ஆம் தேதியும் காலை 11 மணிக்கும் நடைபெற உள்ளது.

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. அதன் பொருட்டு நாமக்கல் மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பரமத்தி வேலூர் அடுத்த பில்லூரில் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு செல்லும் பகுதியினை பார்வையிட்டு பாதுகாப்பினை ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 3ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். எருமப்பட்டி 15 மி.மீ, குமாரபாளையம் 6.20 மி.மீ, மங்களபுரம் 44.80 மி.மீ, மோகனூர் 27 மி.மீ, நாமக்கல் 14 மி.மீ, பரமத்திவேலூர் 1 மி.மீ, புதுச்சத்திரம் 22 மி.மீ, ராசிபுரம் 33 மி.மீ, சேந்தமங்கலம் 11 மி.மீ, திருச்செங்கோடு 12.50 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 30 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 226.50 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான, கொல்லிமலையில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. மேலும் மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையை சீர் செய்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.80 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.85 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.