India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பொருள்கள் மீது சரிவர பேக்கிங் தேதி இல்லை என்று கூறி சுப்பராயன் வழக்கு தொடர்ந்தார். எனவே அதை பரிசிலனைக்கு எடுத்த நுகர்வோர் நீதிமன்றம், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம், வழக்கு தாக்கல் செய்த நுகர்வோர் சுப்பராயனுக்கு 3156 ரூபாய் 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என இன்று தீர்ப்பு அளித்தது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கீரம்பூரில் செயல்பட்டு வரும் ஐடிஐ தொழிற்கல்வி மையத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நேரடியாக சேர்க்கை வரும் ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவிகள் பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் புதிய கடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஊரக இணை தொழில்புரிவோருக்கு 30% மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மோகனூர் 8344896170, புதுச்சத்திரம் 9443201642, பள்ளிபாளையம் 9159738233, மற்றும் திருச்செங்கோடு 8940801996 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மேற்கணட எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் நாமக்கல் மாவட்டத்தில் லாரி சம்பந்தமான தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் அதன் உதிரிபாக தொழிற்சாலை அமைக்க வேண்டும், திருசெங்கோடு பகுதியில் ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும், கோழி தீவனங்களுக்கான GST யை ரத்து செய்ய வேண்டும் போன்றவைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்ஜெட் குறித்து உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கு முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான இணைய வழி விண்ணப்பங்கள் கடந்த 19ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில் தற்போது ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா இலட்சினையை (லோகோ) வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், காந்தி ஆசிரமம் தலைவர் சிதம்பரம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு அளித்தனர். எனவே ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக 21வது தமிழ்நாடு மாநில சிலம்பம் போட்டி கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக 28 மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்கப்பதக்கம், 13 வெள்ளி பதக்கமும், 24 வெண்கல பதக்கமும் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமெச்சூர் சிலம்பம் சங்க நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.