Namakkal

News December 8, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 7, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 7ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது.இதனால் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் ரூ.5.90 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 7, 2024

நாமக்கல்: 2 ஆயிரம் கோழிகள் தீயில் ஏரிந்து நாசம்

image

கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது தோட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று தான் வளர்க்கும் ஆடுகளுக்கு கூல் காய்ச்சி விட்டு அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றுள்ளார். அப்போது அடுப்பில் இருந்து தீ பரவி கொட்டகையில் தீ பிடித்து ஏரிந்ததில், சுமார் 2 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

News December 7, 2024

நாமக்கல் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல்லில் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆடுகளுக்கு பொதுவாக மழைக்காலங்களில் துள்ளுமாரி நோய் என்ற நோய் ஏற்படுகிறது. புதிதாக முளைத்த புல்களை மேயும் ஆடுகளுக்கு இந்நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். கால்டை மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசி செலுத்தி இந்நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 7, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் 

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று திருச்செங்கோட்டில் வழங்கினார். 

News December 6, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி ➤ சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு ➤ நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு ➤ சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர் ➤ தூய்மை பணியாளர்களுடன் உணவு உண்ட ஆட்சியர் ➤ பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை ➤ ராசிபுரத்தில் உலக மண் தினம் கடைபிடிப்பு ➤ தோக்கவாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு

News December 6, 2024

நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது.

News December 6, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

தமிழ்நாடு சட்டசபையின் 2024-25ம் ஆண்டுக்கான மனுக்கள் குழுவினர், நாமக்கல்லுக்கு வருகை தரவுள்ளனர். தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (5நகல்கள், தமிழில் மட்டும்)கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை 600009 முகவரியிட்டு, நேரடியாகவோ, கலெக்டர், டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார் மூலமாகவோ வரும் 20ம் தேதிக்குள்அனுப்பலாம்.

News December 6, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News December 6, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க டிச.10 வரை கால நீட்டிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிச. 10- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோா் விண்ணப்பிக்க டிச. 5 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!