India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அமாவாசை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு பூஜைகளுக்கு பிறகு ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்தப்பட்டது. இதற்குப் பின் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 35 அடி நீளத்துடன் பல்வேறு வகை மலர்கள் கோர்ட்டுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
ப.வேலூர் அருகே பொத்தனூரில் உள்ள சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற உள்ளது.விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ப.வேலூர் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள்,பாண்டமங்கலம் அருகே உரம்பூர் டாஸ்மாக் கடை உள்ளிட்ட 4 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் அறிவுறுத்தலின்படி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இலா ஹிஜான் உத்தரவிட்டுள்ளார்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செ.கோபிகா பிளஸ் தேர்வில் 569 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் ஆசிரியைகள் பாராட்டி சால்வை அணிவித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவி பொறியியல் படிப்பில் பயில ஆர்வம் தெரிவித்துள்ளார்.
அவசியப்பணிக்காக வெளியில் வருபவர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். பல இடங்களில் இளநீர், வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், மோர், ஜூஸ் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது. இந்த நிலையில் இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் நகரில் திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது தொடர்ந்து சாலைகளின் இரு பக்கமும் சிமெண்ட் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கிய பணி திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் இருந்து திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் வரை இப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8, 413 மாணவர்களும், 8, 847 மாணவிகளும் என மொத்தம் 17, 260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 16, 586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு 60 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளில் 14 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
ராசிபுரம் அடுத்துள்ள அண்ணாமலை பட்டி ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகுதிகளைச் செல்ல ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 40.5 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் “ஈஷா யோகா மையம் சார்பில், யோகா பயிற்சி முகாம் மே.8ல் துவங்கி ஏழு நாட்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது. ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும் , பின்னர் மாலை 6 மணி முதல் 8.30 மணிவரையும் இரு பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் மே.14 வரை நடைபெறுகிறது.
ரீட்ரேடிங் தொழிலுக்கு தேவையான இயற்கை ரப்பர் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வு காரணமாக டயர் ரீட்ரேடிங் தொகை சுமார் 15% அதிகரித்துள்ளது இந்த விலை உயர்வை கருத்தில் கொண்டு லாரி உரிமையாளர் ரீட்ரேடிங் விலை உயர்வுக்கு ஆதரவு தர தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர் சங்கம் சார்பாக சங்கத்தின் நிர்வாகிகள் ராஜ்குமார் வரதராஜ் உள்ளிட்டோர் கேட்டு கொண்டுள்ளனர்
Sorry, no posts matched your criteria.