India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளரும் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன் அவர்கள் இன்று நாமக்கல் விருந்தினர் மாளிகையில்” மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உட்பட பலர் பங்கேற்றனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர் பகுதியில் சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தனூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது. ஒரு நுங்கின் விலை ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. இன்று நாமக்கல் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிளை சிறையின் தன்மை குறித்தும் கைதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர் கிளை சிறையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட கிளை சிறை காவல் துறை அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு முகாம் 23- 24 கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் 13.05.2024 அன்று பாய்ச்சலில் உள்ள பாவை கல்லூரியில் 2, 000 மாணவ, மாணவியர்களுக்கும் 15.05.24 அன்று குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் 1,000 மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில், பொதுமக்கள் கோடை வெயிலில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், இன்று 2 மி.மீட்டரும், நாளை ( வியாழக்கிழமை) 20 மி.மீட்டரும், நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 105.8 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நேற்றைய ஏலத்துக்கு மொத்தம் 825 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,669 முதல் 7,699 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,495 முதல் 5,099 வரையிலும் என மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
நாமக்கல் மண்டலத்தில் 510 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு,515 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதனிடையே வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாகவும்,மீன்பிடிக்காலம் தொடருவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை உயர்வடைந்துள்ளது
Sorry, no posts matched your criteria.