Namakkal

News May 10, 2024

நாமக்கல்: ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள் 

image

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த இரட்டை சகோதரிகளான அக்சயா – அகல்யா ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது.

News May 10, 2024

நாமக்கலில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

நாமக்கல்: 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்

image

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் அருகே முத்துடையார்பாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணி புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி ஹரிணி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக இடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணிக்கு ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

News May 10, 2024

நாமக்கல் 14ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.86% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.47 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.22 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று நாமக்கல் மாவட்டம் 14ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: நாமக்கல்லில் 93.51% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 93.51% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.83% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.29% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

நாமக்கல்: தெருநாய் கடித்து.. 3 சிறார்கள் காயம்

image

ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 3 சிறார்களை தெருநாய் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காயமடைந்த யாகவீர் (5), தேஜஸ்வசந்த் (7), பிரியதர்ஷினி (11) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 9, 2024

தெருநாய் கடித்து 3 சிறார்கள் காயம்

image

ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 3 சிறார்களை தெருநாய் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காயமடைந்த யாகவீர் (5), தேஜஸ்வசந்த் (7), பிரியதர்ஷினி (11) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 9, 2024

நாமக்கல் எட்டுக்கை அம்மன் கோயில் சிறப்புகள்!

image

நாமக்கல் கொல்லிமலையில் உள்ள மேல்கலிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது எட்டுக்கை மாரியம்மன் கோயில். இதை சுற்றி உயரமான சில்வர் ஓக் மரங்களும், காட்டுக் கொடிகளும் சூழ்ந்துள்ளது. இந்த எட்டுக்கை அம்மனை சிலர் கொல்லிப்பாவை என்றும் அழைப்பதுண்டு. கொல்லிமலையைக் காக்கும் தேவதையாக இங்கிருக்கும் அம்மனை பாவிக்கின்றனர். பூஞ்சோலை கிராமத்திலிருந்து நடந்தே இக்கோவிலுக்குச் செல்லலாம்.

News May 9, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

நாமக்கல் அருகே 3 குழந்தைகளை கடித்த நாய்

image

ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் இன்று காலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, 3 குழந்தைகளை கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!