Namakkal

News December 16, 2024

குமாரபாளையத்தில் நகரக் குழு கூட்டம் 

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நகர குழு கூட்டம் நகர அலுவலகத்தில் நகரக் குழு உறுப்பினர் என்.காளியப்பன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது .இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் .அசோகன். எம் ஆர் முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் என்.சக்திவேல், நகர குழு செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

News December 16, 2024

ஐ.டி.ஐ.யில் படிக்க நேரடி சேர்க்கை – விண்ணப்பம் வரவேற்பு

image

சேந்தமங்கலத்தில் துவங்கப்பட உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி சேர்க்கைக்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக அறை எண், 304-ல் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் நேரடி சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News December 16, 2024

ஐ.டி.ஐ.யில் படிக்க நேரடி சேர்க்கை – விண்ணப்பம் வரவேற்பு

image

சேந்தமங்கலத்தில் துவங்கப்பட உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி சேர்க்கைக்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக அறை எண், 304-ல் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் நேரடி சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News December 16, 2024

வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு

image

பரமத்தி வேலூர் பூக்கள் ஏல சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது. கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.1,400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.550-க்கும், ரோஜா கிலோ ரூ.380-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ.180-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ.800-க்கும் ஏலம் போனது.

News December 15, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 15, 2024

நாமக்கலில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் ரூ5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ரூ.5.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

News December 15, 2024

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு அதிகாலை நடைபெற்றது. 11 அளவில்பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் பெற்றனர்.

News December 15, 2024

நாமக்கல்: தீப்பிடித்து புதுமண தம்பதி படுகாயம்

image

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28), இவரது மனைவி துர்கா (20). இருவரும் புதுமண தம்பதிகள். நேற்று காலை சுரேஷ் வெந்நீர் போட சமையல் கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென சுரேஷ் மீது தீப்பற்றி எரிந்தது. தடுக்க வந்த அவரது மனைவி துர்கா மீதும் தீப்பற்றியது. அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

News December 15, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி

image

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் டிச.30ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 5 மணி அளவில் ஆஞ்சநேயர் 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் 11 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதன்பிறகு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.

News December 15, 2024

நாமக்கல்: பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை

image

நாமக்கல்லில் பூண்டு விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.380-க்கு விற்பனையானது. ஆனால் சில்லரை விற்பனை கடைகளில் முதல்ரக பூண்டு கிலோ ரூ.480 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. 2வது ரக பூண்டு கிலோ ரூ.425 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

error: Content is protected !!