Namakkal

News December 17, 2024

நாமக்கல்லில் தொழில்முனைவு பயிற்சி

image

நாமக்கல் மாவட்டம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்-TN (EDII-TN), டிசம்பர் 16, 2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை MSME திட்டங்கள் குறித்த பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. KSR தொழில்நுட்பக் கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு (HEIs) கலந்தாய்வு நடத்தப்பட்டது.

News December 17, 2024

நாமக்கல் தூசூர் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

image

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையால் கொல்லிமலையில் இருந்து வந்த நீர் ஏரியை நிரப்பி உள்ளது. இந்த ஏரி 543 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய பாசனங்களுக்கு பயனளிக்கக் கூடியதாக உள்ளது. 66.87 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரி தற்போது முழுமையாக நிரம்பி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

News December 17, 2024

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.91 ஆக அதிகரித்துள்ளது. விலை உயர்வால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 17, 2024

நாமக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க!

image

நாமக்கலில் டிசம்பர் மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமினை வேலை தேடுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 17, 2024

நாமக்கல்லில் மின்தடை அறிவிப்பு

image

மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக நாமக்கல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாளை (டிச.18) நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசம்வம்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர், முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

நாமக்கல்லில் மின் விநியோகம் நிறுத்தம்

image

நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி,சின்னமுதலைப்பட்டி பகுதிகளில் டிச.18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரிய அதிகாரி சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுரேஷ் (9788015452), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 16, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் நரசிம்ம சாமி கோயிலில் 10,000 பேர் தியானம்.
2.நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்.
3.கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்.
4.வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு.
5.ஐ.டி.ஐயில் படிக்க நேரடி சேர்க்கை- விண்ணப்பம் வரவேற்பு.
6.திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி.

News December 16, 2024

குமாரபாளையத்தில் நகரக் குழு கூட்டம் 

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நகர குழு கூட்டம் நகர அலுவலகத்தில் நகரக் குழு உறுப்பினர் என்.காளியப்பன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது .இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் .அசோகன். எம் ஆர் முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் என்.சக்திவேல், நகர குழு செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

News December 16, 2024

ஐ.டி.ஐ.யில் படிக்க நேரடி சேர்க்கை – விண்ணப்பம் வரவேற்பு

image

சேந்தமங்கலத்தில் துவங்கப்பட உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி சேர்க்கைக்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக அறை எண், 304-ல் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் நேரடி சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

error: Content is protected !!