Namakkal

News December 18, 2024

திருச்செங்கோடு: 2024-25ஆம் ஆண்டின் கல்வித் தலைவர் விருது

image

திருச்செங்கோடு இந்தியன் பப்ளிக் பள்ளியின் ஹைதராபாத்தில் நடந்த மதிப்புமிக்க ET TECH X விருதுகளில், 2024-25ஆம் ஆண்டின் கல்வித் தலைவர் விருது நிர்வாக இயக்குநர் டாக்டர். சி. ஷிவ்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது நல்ல மாற்றத்தை உண்டாக்கி, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்களைக் கொண்டாடுகிறது.

News December 18, 2024

நாமக்கல்லில் விபத்து: பேராசிரியர் பலி

image

திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றிவந்தார். நேற்று மாலை வேலையை முடித்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது கொக்கராயன்பேட்டை என்ற இடத்தில் எதிரே வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 18, 2024

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 18, 2024

அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத மூன்றாம் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மஞ்சள் நிற உடையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.

News December 18, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (டிச.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதேபோல்,வலையபட்டி, கோட்டபாளையம் மற்றும் சில பகுதிகளிலும் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம் ரூ 5.70
2.நாளை எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட இளநகர் கிராமத்தில் சிறப்பு மண் பரிசோதனை முகாம்
3.நாமக்கல் தூசூர் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
4.நாமக்கல்லில் தொழில்முனைவு பயிற்சி
5.கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

News December 17, 2024

நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்

image

நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு பகுதிகளில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாளை காலை 9:30 மணிக்கு வார்டு எண்.24 ஜெட்டிகுலத்‌ தெரு மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.31 நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News December 17, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.70 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை குறைந்த விலை ரூ 5.70 ஆகவே நீடிக்கிறது.

News December 17, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167008), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 17, 2024

நாளை சிறப்பு மண் பரிசோதனை முகாம்

image

வேளாண்மை துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி நாளை 18/12/2024 புதன்கிழமை எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட இளநகர் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. அப்பகுதி விவசாய பெருமக்கள் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!