Namakkal

News July 31, 2024

நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சூரியம்பாளையம் செங்குந்தர் பாவடி திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை நெசவாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 31, 2024

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

image

நாமக்கல் நகரில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த சுபாஷ். முகமது ரியாஸ், பிரபாகரன் ஆகிய மூன்று பேரை நேற்று இரவு நாமக்கல் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கைது செய்த மூன்று பேரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 31, 2024

புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

image

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் புதியதாக நிர்வாகிகள் பலர் இணைந்துள்ளனர்.  புதிய உறுப்பினர் அட்டையை கழக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியிடம் வழங்கினார். இந்நிகழ்வில்  கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News July 31, 2024

கோழி கிலோவுக்கு ரூ.12 குறைவு

image

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.87-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும், முட்டை கொள்முதல் விலை ரூ.4.50 விற்பனையாகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

News July 31, 2024

கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடக்கும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆக.1 முதல் 3 வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க வேண்டும். மீறி செயல்பட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

News July 30, 2024

மாணவிக்கு உடனடியாக மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம், சரளைமேடு பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிதன்யா மூன்று சக்கர மிதிவண்டி தேவை என மனு கொடுத்தார். உடனே அம்மாணவிக்கு மூன்று சக்கர மிதிவண்டியை ஆட்சியர்  வழங்கினார்.

News July 30, 2024

நாமக்கலில் மழை பெய்ய வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கலில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

கண்டிஷன் நிறைந்த பொங்கலாயி அம்மன் கிடாவெட்டு

image

நாமக்கல் அருகே மலையாம்பட்டியில் பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் மேலாக ஆண்கள் மட்டும் கிடாவெட்டி கொண்டாடும் சமபந்தி திருவிழா ஆடி மாதங்களில் பொங்கலாயி அம்மன் கோயிலில் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்வில் பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கு 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சாதி பேதமின்றி இந்த கிடாவிருந்தில் கலந்து கொள்வார்கள். ஒரே கண்டிஷன் இந்த உணவை வீட்டிற்கு எடுத்து செல்லகூடாது .

News July 30, 2024

வதந்தி பரப்புவோருக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் புதிதாக மருத்துவமனை கட்டிடம் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனை குறித்து, உண்மைக்கு மாறான தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனுதாரர் கோரிக்கை ஏற்று அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!