Namakkal

News May 21, 2024

நாமக்கல்: தக்காளி 4 கிலோ ரூ.100க்கு விற்பனை

image

தர்மபுரி- கிருஷ்ணகிரி ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகமாக அங்கு பயிர் செய்யப்படுகிறது. அதிகமாக பயிர் செய்யப்படுவதன் காரணத்தால் தக்காளி விலை குறைந்துள்ளது.இதனிடையே நாமக்கல் மாவட்ட வியாபாரிகள் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகளை வாங்கி வந்து நாமக்கல் நகர பகுதிகளில் வாகனத்தில் வைத்து 4 கிலோ ரூ.100 என அளவில் விற்பனை செய்கின்றனர். இது இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

News May 21, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 812 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் 20ஆம் தேதி எருமப்பட்டி 74.00 மிமீ,குமாரபாளையம் 64.60மிமீ,மங்களபுரம் 37.70 மிமீ,மோகனூர் 7.00மிமீ,நாமக்கல் 115.20 மிமீ,பரமத்தி வேலூர் 26.30மிமீ,புதுச்சத்திரம் 157.4 மிமீ,ராசிபுரம் 103மி. மீ,சேந்தமங்கலம் 105 மிமீ,திருச்செங்கோடு 42.40 மிமீ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 50.50 மிமீ,கொல்லிமலை செம்மேடு 29.00 மிமீ என 812.1 மிமீ மழை நாமக்கல் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.

News May 21, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தேன்கூட்டால் மக்கள் அச்சம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அறையின் மேல்தளத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது.அந்த பகுதியில் தேனீக்கள் கூடு கட்டுவதும்,தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வழக்கமாகும்.ஆனால் தற்போதைய தேன்கூடு பெரிய அளவிலும்,வெயில் அடிக்கும்போது வெப்பம் தாங்காமல் கலைந்து சென்று மக்களைத் தாக்குகிறது.]. இதனால் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது

News May 21, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தேன்கூட்டால் மக்கள் அச்சம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அறையின் மேல்தளத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது.அந்த பகுதியில் தேனீக்கள் கூடு கட்டுவதும்,தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வழக்கமாகும்.ஆனால் தற்போதைய தேன்கூடு பெரிய அளவிலும்,வெயில் அடிக்கும்போது வெப்பம் தாங்காமல் கலைந்து சென்று மக்களைத் தாக்குகிறது.]. இதனால் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது

News May 21, 2024

நாமக்கல்: 25ந் தேதி இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு

image

வரும் சனிக்கிழமை 25.5.24 அன்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கமும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ முனையும் இணைந்து மருத்துவ முகாம் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து விதமான உடல் பரிசோதனைகள் செய்து கொண்டு தேவைப்படுபடுவர்களுக்கு குறைந்த விலையில் அறுவை சிகிச்சைகள், ஓரிருவருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

News May 20, 2024

நாமக்கல்: அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கல் 

image

அக்னி வெப்பம் மக்களை வாட்டி கொண்டு உள்ளது இதனிடையே நாமக்கல் மாவட்டம் மற்றும் நகரத்தில் ஆங்காங்கே மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனிடையே அதிமுக நாமக்கல் நகர கழகம் மற்றும் 35-ஆம் வார்டு செயலாளர் ராஜசேகர் இணைந்து 24-ஆம் நாளாக பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. 

News May 20, 2024

நாமக்கல்லில் கண் சிகிச்சை முகாம்

image

வருகின்ற 25/05/24 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் எம்.ஜி.எம் நிறுவனம் இணைந்து 32வது ஆண்டாக இம்முகாமை நடத்துகிறது. இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கும் இடம், உணவு, கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.

News May 20, 2024

நாமக்கல் கபடி போட்டியில் முதல் பரிசு

image

நாமக்கல், திருச்செங்கோடு பகுதியைச்சேர்ந்த அன்னைத்தமிழ் ஆண்கள் அணி நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூாில் 19.05.2024, 20.05.2024 நடந்த கபாடி போட்டியில் இறுதிப்போட்டி இன்று‌ காலை நடைபெற்றது. இதில் அன்னைத்தமிழ் பரிசை வென்றது இரண்டாவது பரிசு திண்டுக்கல் அணி வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

News May 20, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறிய கூட்டரங்கில் இன்று காலை வாக்கு இன்னும் மைய அலுவலருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது

News May 20, 2024

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

புதுச்சத்திரம் அருகே ரெட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்,மகன் கவின் குமார் நேற்று முன்தினம் காலை குளித்துவிட்டு வந்து,அவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை ஈரமான கையுடன் தொட்டு,ஆப் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.அவரை மின்சாரம் தாக்கியது.தூக்கி வீசப்பட்ட கவின்குமாரை பெற்றோர் காப்பாற்றி சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

error: Content is protected !!