Namakkal

News August 3, 2024

நாமக்கல்லில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்றும், நாளையும் 4 மி.மீ மழையும், அடுத்த 2 நாட்கள் 5 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 3, 2024

கொல்லிமலை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை முதல் கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து அணிந்து நாமக்கல் இருந்து கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில், செம்மேடு பகுதிகளுக்கு சென்று விட்டு மீண்டும் நாமக்கல் வரும். இதேபோல் காரவள்ளி கொல்லிமலை அடிவார கோவிலில் இருந்து கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

News August 3, 2024

வல்வில் ஒரி விழா விடுமுறை

image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆக.2,3 தேதிகளில் வல்வில் ஒரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஒரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்படுகிறது.

News August 2, 2024

குமாரபாளையம் வரும் ஈபிஎஸ்

image

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை சனிக்கிழமை காலை சங்ககிரியில், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளார். முன்னேற்பாடு பணிகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News August 2, 2024

பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு

image

பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று , நாமக்கல்  சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர்  மு.ஆசியா மரியம்,  மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் ., முன்னிலையில்  காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,  ஆய்வு மேற்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர்.  

News August 2, 2024

கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 2, 3) வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தகவலை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

ஆடி 18ல் காவிரியில் புனிதநீராட ஆட்சியர் தடை

image

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் லட்சுமி நாராயணபெருமாள் கோயில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், வேலூர் காசி விஸ்வநாதர் கோயில், ஐமீன் இளம்பள்ளி உமா மகேஸ்வரர் கோயில், கொத்தமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோயில், தேவராயசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களில் எதிர்வரும் 3ந் தேதி ஆடி18 மற்றும் 4ந் தேதி ஆடி 19 அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் இறங்கி புனிதநீராட ஆட்சியர் உமா தடை விதித்துள்ளார்.

News August 1, 2024

108 பணிக்கு 25 பேர் தேர்வு

image

நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 25 தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேர்காணலை நாமக்கல் மாவட்டம் மேலாளர் சின்னமணி மற்றும் வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் தலைமையில் சேலம் மாவட்டம் மேலாளர் மனோஜ் முன்னிலையில் சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார்.

News August 1, 2024

தலைமை நீரேற்று நிலையம் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சியருமான ஆசியா மரியம்,  இன்று குமாரபாளையம் நகராட்சி, காவேரி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

News August 1, 2024

விவசாயிகளுக்கு மானியத்தில் சோலார் பம்பு செட்

image

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் நாமக்கல் வசந்தபுரம் மற்றும் திருச்செங்கோடு வரகூராம்பட்டியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு நாமக்கல் கலெக்டர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!