India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.04286-222260 என்ற தொலைபேசி மூலமோ onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச.உமா கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று ஆஞ்சநேயர் பகவானுக்கு தங்க கவசங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயர் அருள் பெற்று செல்கின்றனர். மேலும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.
கீரம்பூா் புதுவலவு பகுதியை சோ்ந்தவா் விவசாயி அா்த்தநாரி (70).ஜங்கமநாய்க்கன்பட்டியில் உள்ள தனது உறவினரை பாா்ப்பதற்காக டூவீலரில் நேற்று முன்தினம் இரவு வரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.ஒரு கோழிப்பண்ணை அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.அவரை அந்த வழியாக வந்தவா்கள் நாமக்கல் GH அனுப்பி வைத்தனர்.அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி என் புதுப்பட்டி அரூர் பரளி சுற்றுப் பகுதிகளில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை சேலத்தில் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது சிப்காட் எதிர்பார்ப்பாளர்கள், விவசாயிகள் என பலரும் உடன் இருந்தனர்
கடந்த 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில், நிலம்-கடல்-வான்வெளியில் வீர, தீர சாகசம் புரிபவர்களுக்காக 2023ம் ஆண்டிற்கான ‘டென்சிங் நார்கே’ தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது.இந்த விருதிற்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் கூடாது பொது சுகாதாரம் 108 ஆம்புலன்ஸ் சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் மக்களுக்கான மருத்துவ தேவையை தமிழக அரசு முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
நாமக்கல் வட்டாரத்தில் தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகள் கோடை காலத்தில் நீர் தேவை குறைவாக உள்ள சோளம்,உளுந்து,எள்,நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு வருமானம் பெறலாம். இதற்காக கோடை பயிர் சாகுபடித் திட்டம் 590 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்கு தேவையான விதைகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படுகிறது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா கூறியுள்ளார்
திருச்செங்கோடு,செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து, அருள்மிகு ஸ்ரீ. முத்துக்குமார சுவாமி திருக்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமிக்கு மன்னர் அலங்காரம் செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் திருச்செங்கோடு திருவிழாவை கான வந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம்- சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் என கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 24ஆம் தேதி பதிவான மழை அளவு விவரம் மங்களபுரம் 6.60 மி.மீ, மோகனூர் 4.00 மி.மீ பரமத்தி வேலூர் 28.00 மி.மீ, புதுச்சத்திரம் 14 மி.மீ, நாமக்கல் 11 மி.மீ ராசிபுரம் 10.00 மி.மீ, சேந்தமங்கலம் 10.00 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 5.00 மி.மீ என 88.60 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.