Namakkal

News December 26, 2024

நாமக்கல் அருகே அதிகாலையில் மழை

image

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வாம்பட்டியில் இன்று அதிகாலை 3 மணிக்கு பரவலாக மழை பெய்தது. போன வாரம் பெய்த மழையில் இங்கு இருந்த குட்டைகள் நிரம்பியிருந்தன. இந்த வாரம் முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News December 25, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை ➤ நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு ➤ வெப்படை அருகே போலி பெண் மருத்துவர் கைது ➤ நாமக்கல்லில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம் ➤ பரமத்தி வேலூரில் கடையில் பயங்கர தீ விபத்து ➤ வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் ➤ நாமக்கல்லில் வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிப்பு

News December 25, 2024

நாமக்கல்லில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 25, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 25ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 25, 2024

ராசிபுரத்தில் வாஜ்பாய் 100வது பிறந்த நாள் விழா

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சியின் மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News December 25, 2024

வெப்படை அருகே போலி பெண் மருத்துவர் கைது

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை இந்திரா நகர் கிராமத்தில், கண்மணி என்பவர் போலியாக பல மாதங்களாக கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வருவதாக அந்தப் புகாரை எடுத்து குமாரபாளையம் தலைமை மருத்துவர் பாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விற்பனை போலீசார் நேற்று இரவு கண்மணியை கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

News December 25, 2024

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.94 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 550 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News December 25, 2024

நாமக்கல்லில் தயாராகும் 1 லட்சம் வடைகள்!

image

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு அணிவிக்க 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 38 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News December 25, 2024

அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எம்பி

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான KRN. ராஜேஷ்குமார் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

News December 25, 2024

நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும், அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!