India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. இக்கல்லூரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கைக்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவா் சேர்க்கைக்காக, முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்சிசி மாணவா்கள் உள்பட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் வியாழக்கிழமை (மே 30) காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அவர்களிடம், இன்று நாமக்கல் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் அசோசியன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில், சட்டவிரோதமாக சிம்கார்டுகளை ஒரு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் சிம் கார்டுகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் அவர்களை இன்று (29/05/2024) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில், இடிந்த கட்டிடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின் மாதிரி ஒத்திகை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதை ஒட்டி, அதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது. அரசு அதிகாரிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, +1,+2 தேர்ச்சி,தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி,டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் 10.05.24 முதல் 07.06.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 122 சுற்றுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தப் பணியில் 306 போ் ஈடுபடுகின்றனா். கூடுதலாக 306 போ் காத்திருப்பில் வைக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனர்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 60 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மரு ச.உமா தலைமையில் வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடை பெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.