Namakkal

News December 27, 2024

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு 11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

News December 27, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (27.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (7548826260), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 27, 2024

தொழில் – வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

image

நாமக்கல் – பரமத்தி சாலை கொங்கு மண்டபத்தில் நடைபெற்ற BNI BRAMMA தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை இன்று நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் BNI BRAMMA அமைப்பினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 27, 2024

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது., மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

News December 27, 2024

இலக்கியத் திறனறித் தேர்வில் மாநில அளவில் சாதனை

image

ராசிபுரம் வட்டம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானோதயா பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்வை அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தி வருகிறது. இத்தேர்வை சுமார் இரண்டு இலட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதியிருந்தனர். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முதல்வர், மற்றும் தமிழாசிரியர் குமரேசன் அவர்களை பள்ளியின் தலைவர் வாழ்த்தினார்.

News December 27, 2024

நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 31/12/2024 அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடர்பாக குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

image

நாமக்கல் ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில், அனுமன் ஜெயந்தி விழா 30.12.2024 (ம) அரங்கநாதர் சன்னதியின் வைகுந்த ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) 10.01.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. அதுசமயம் அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 27, 2024

நாமக்கல் அருகே விஏஓ மீது தாக்குதல்: ஒருவர் கைது

image

நாமக்கல் அருகே அமைந்துள்ள வேலகவுண்டம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஏஓவை தாக்கிய திருமுருகன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வேல கவுண்டம்பட்டி போலீசார் திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. விஏஓவை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 15 நாட்களாக வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

News December 27, 2024

ராசிபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் அத்துமீறலை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று ராசிபுரத்தில் அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி தலைமையில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது. 

News December 27, 2024

முன்னாள் பிரதமர் மறைவுக்கு விவசாய சங்கம் இரங்கல்

image

இந்திய பொருளாதாரத்தை தலை நிமிரவைத்து ஊக்குவித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். அவருடைய மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி ஆழ்ந்த இரங்கலை நாமக்கல்லிலிருந்து அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!