Namakkal

News December 28, 2024

நாமக்கல்: IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

image

திருச்செங்கோடு வட்டம் கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி, IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சங்கர் ராமன் மற்றும் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் கல்வி தரம் மேம்படவும் வேலைவாய்ப்பு பெறவும் உதவுகிறது.

News December 28, 2024

நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 31ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

நாமக்கல் ஆட்சியருக்கு சத்துணவு ஊழியர் சங்கம் நன்றி

image

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் நாமக்கல் மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து கூறவும் நாமக்கல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News December 28, 2024

நாமக்கல்லில் இன்றுமுதல் கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 10:30 மணி அளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.

News December 28, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு அஞ்சலி செலுத்திய எம்பி

image

முன்னாள் பாரத பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். 

News December 28, 2024

நாமக்கல் எம்பி கத்தார் நாட்டு தூதரிடம் கோரிக்கை

image

புதுடெல்லியில் கத்தார் நாட்டு தூதரகத்தில் கத்தார் தூதர் Afraa Ghanim Al Saleh-ஐ தமிழ்நாட்டில் இருந்து கத்தார் நாட்டிற்கு அனுப்பப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை தளர்த்த கோரி தமிழ்நாடு கோழிப்பண்ணை தொழில் சங்கங்களின் தலைவர்களுடன் இணைந்து நாமக்கல் எம்.பி. ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 27, 2024

232 நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

image

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே நேற்று இரவு வளையப்பட்டியில் 232வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டனர்.

News December 27, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.50 விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

News December 27, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் கருத்து கேட்பு கூட்டம்
2.தொழில் – வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்
3.சேர்வாம்பட்டியில் மழை பெய்தது
4.இலக்கியத் திறனறித் தேர்வில் மாநில அளவில் சாதனை
5.வாள்வீச்சு வீராங்கனை சரக அலுவலகத்தில் பொறுப்பேற்பு

error: Content is protected !!