Namakkal

News August 6, 2024

நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

News August 6, 2024

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 39 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 6ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மங்களபுரம் 3 மிமீ, நாமக்கல் 3 மிமீ, பரமத்திவேலூர் 1மிமீ, புதுச்சத்திரம் 3.00 மிமீ, ராசிபுரம் 39 மிமீ, சேந்தமங்கலம் 4மிமீ, திருச்செங்கோடு 13 மிமீ, ஆட்சியர் வளாகம் 2 மிமீ, கொல்லிமலை செம்மேடு 3 மிமீ என மாவட்டத்தில் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 39 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News August 6, 2024

கோழி வளர்ப்பு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டின கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற்கொள்ள 24-25ம் ஆண்டில் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாமக்கலில், ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,500 பயனாளிகளுக்கு செயல்படுத்த நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.

News August 6, 2024

அரசு ஐ.டி.ஐயில் விண்ணப்பிக்க ஆகஸ்ட்16 வரை நீட்டிப்பு

image

நாமக்க்லில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான் நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், கொல்லிமலையில் இயங்கும் ஐடிஐ நிலையத்திலோ, 9499055843, 9499055846 என்ற மொபைல் எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 5, 2024

நாமக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் ரங்கநாதர் தேர் நிலையம் அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழைய ஓய்வூதிய நடைமுறையை பயன்படுத்த வேண்டும், கலந்தாய்வு நேர்காணல் சரியாக நடக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News August 5, 2024

‘சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்’

image

திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜனநாயகம் இல்லாத சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் உள்நாட்டு கலவரம் மூலம் முடிவு கட்டுவார்கள் என்பது பங்களாதேஷ் நிகழ்வுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1 மாத காலமாக வங்காளதேசத்தில் மாணவர்கள் உள்நாட்டு கலவரமும், இந்த 2 நாட்களாக பொதுமக்கள் உள்நாட்டு கலவரமும் பங்களாதேஷ் அரசுக்கு எதிராக கிளம்பியிருக்கிறது” என்றார்.

News August 5, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் மாட்டம்மை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களது கால்நடைகளை மாட்டம்மை நோய் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.ச.உமா தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில், முத்தரையர் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுக்கப்படுவதாகவும், அதில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர் என்றும் கூறி முத்தரையர் சமூக மக்கள் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர் தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News August 5, 2024

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் நாமக்கல், திண்டுக்கல்லில் சிபிசிஐடி சோதனை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நிலமோசடி வழக்கு சம்பந்தமாக தற்போது நாமக்கல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சிபிசிஐடியினர் சோதனை நடத்தி வருகின்றனர்

News August 5, 2024

நாமக்கல்லில் ரூ 89.29 கோடியில் நவீன பால் பண்ணை

image

நாமக்கல்லில் நேற்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா முன்னிலையில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ 89.29 கோடியில் நவீன பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!