Namakkal

News December 30, 2024

நாமக்கல்லில் 2,000 போலீஸ் குவிப்பு

image

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (டிச.30) அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிய உள்ள காரணத்தால் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு பணியில் எஸ்  ராஜேஷ் கண்ணன் தலைமையில் சுமார் 2,000 போலீசார் நாமக்கல் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 57 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News December 30, 2024

நாமக்கல் எம்பி தனது தாத்தாவுக்கு அஞ்சலி

image

நாமக்கல் திமுக எம்பி ராஜேஷ்குமாரின் தாத்தாவின் நண்பரும் புதுச்சத்திரம் கொளத்துப்பாளையத்தில் ராசிபுரம் நிலவள வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவருமான கணபதி தனது 92வது வயதில் 23.12.24 அன்று இயற்கை எய்தினார். அவருக்கு எம்பி ராஜேஷ்குமார் மற்றும் புதுச்சத்திரம் ஒன்றிய செயலர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

News December 30, 2024

நாமக்கல்: 50% மானியத்தில் பயிறு வகை விதைகள்

image

நாமக்கல் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 64 கிராம பஞ்சாயத்துகளில் வரப்புகளில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்திட 2560 ஹெக்டேர் பரப்பிற்கு பயறு வகை விதைகள் 50% மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 2013 விவசாயிகளுக்கு 2486 எக்டர் பரப்பிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது

News December 30, 2024

நாமக்கல்: சோலார் பம்ப் செட்டுகளுக்கு மானியம்

image

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக சோலார் பம்ப்செட் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டிற்கான இலக்கானது 21 எண்களுக்கு பெறப்பட்டு, 21 எண்களுக்கு பணிகள் முடிக்கப்பட்டு 13 எண்களுக்கான மாநில பங்கு 15.98 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா: ஆய்வு செய்த ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உலக புகழ்பெற்றது. அக்கோவிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவானது நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகின்றது. அப்பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டும் தெரிந்துகொண்டார்.

News December 29, 2024

கிரிக்கெட்டில் நாமக்கல் மாணவி சாதனை

image

2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அணி மகத்தான வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதில் மோகனூர் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி தமிழ்நாடு அணியில் 11 பேர் அணிக்குழுவில் இடம் பெற்று ஆல்ரவுண்டர் ஆக ஜொலித்தார். இவருக்கு கல்லூரி தலைவர் நல்லுசாமி பாராட்டினார்.

News December 29, 2024

இரவு ரோந்து பணிக்காக காவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்களின் விவரம்: நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் நடராஜன் (94422 42611), திருச்செங்கோடு -வெங்கட்ராமன் (94981 72040), வேலூர்- கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 29, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 29, 2024

நாமக்கல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசால் Naan Mudhalvan Finishing School என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது 18-35 வயது வரை உள்ள வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதே ஆகும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ]மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ 7904111101, 9080242036, 948774509 தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

முத்தங்கியில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சிநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத ஞாயிற்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் பெற்றனர்.

error: Content is protected !!