India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (31.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல், திருச்செங்கோடு – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதில் நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி 2-ஆம் ஆண்டு பி.காம் பாடப்பிரிவு மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதி, தமிழ்நாடு அணியில் 11 பேர் அணிக்குழுவில் இடம் பெற்று, ஆல்ரவுண்டராக ஜொலித்தார். அம்மாணவியை கல்லூரி தலைவர் நல்லுசாமி பாராட்டினார்.

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக +2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வேத விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உங்கள் நண்பர்களுடைய பெயரில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய அதிகமான வாய்ப்பு உள்ளது என்று நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிப்பு விடுத்தனர். குற்றம் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930லும் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சலையும் தெரிவிக்கலாம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று புதுமைப்பெண் விரிவாக்கம் தொடக்க விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், 15 நபர்களுக்கு ரூ.30,000 பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் .

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.

➤ நாமக்கல்லில் சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி ➤ செந்நாய் மற்றும் நாய்களின் தாக்குதலால் ஆடுகள் இறப்பு ➤1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் ➤ களப்பநாயக்கன்பட்டியில் சாரல் மழை ➤ அதிமுகவினர் ராசிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ➤ முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கைது ➤நாமக்கல்லில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் ➤ வெண்ணந்தூரில் லேசான மழை

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (30.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல், திருச்செங்கோடு – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

ராசிபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கைது ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் அனுமதி இன்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்ட கட்சியினர் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.