India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் பாலவாடி பகுதியைச் சேர்ந்த 21 பேர் வேனில் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதில் 20 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சேலம் காவேரி மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் உயர் தொழில் நுட்ப ஆய்வகம், மாணவர்கள் வருகை பதிவேற்றம் (இஎம்ஐஎஸ் ) ஆகிய பணிகளுக்காக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கணினி வழித் தேர்வு இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் ஏழு மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CISF மற்றும் TSP பணி அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா உஞ்சனை பொன் காளியம்மன் கோவில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுகவில் வெற்றி பெற்ற விஎஸ் மாதேஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று நடைபெறவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களின் கையால் நாடாளுமன்ற கூட்டத்தின் அடையாள அட்டை அணிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் – 4,44,950 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் தமிழ்மணி – 4,16,763 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் கே.பி.இராமலிங்கம் – 1,00,498 வாக்குகள்
*நாதக வேட்பாளர் க.கனிமொழி – 89,693 வாக்குகள்
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தேசிய அளவில் 290-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதனையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட V.S.மாதேஸ்வரன் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் நாமக்கல் மக்களவை தொகுதி வெற்றி சான்றிதழை பெற்ற நிலையில் தி.மு.க தொண்டர்கள் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து இந்தியா கூட்டணி வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல் அருகே அமைந்துள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் மையத்தில் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 444950 வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 416763 வாக்கு எண்ணிக்கையும் திமுக மற்றும் அதிமுக இடையே 28137 வாக்கு வித்தியாசத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னணியில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.