India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10,12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆண் பெண் ஸ்பின்னிங் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது
பயிற்சியினை httpஸ்:/tntextile.tn.gov.in/job// பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யபட்டது. நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலாவது அமா்வில் நீதிபதிகள் எம்.பாலகுமாா், சி.விஜயகாா்த்திக், எம். பிரவீனா, இரண்டாவது அமா்வில் நாமக்கல்லில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வாயிலாக ரூ. 10.47 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து உள்ளதால், பிரதி, திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது ,இனி தொடர்ந்து நடைபெறும் எனவும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்காக தீக்கதிர் சந்தா சேர்த்து இயக்கம் ,
நாமக்கல் பிரதேச குழுவின் சார்பில் எருமப்பட்டி பகுதிகளில் இன்று துவங்கியது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, தீக்கதிர் பொறுப்பாளர் எம்.அசோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், நாமக்கல் பிரதேச குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் ஆகியோர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மாலதி ரெட் கிராஸ் மாவட்ட செயலர் இராஜேஸ்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தார் சிஎம்எஸ் கல்லூரி யூத் ரெட் கிராஸ் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜூன் மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது பொதுமக்கள் நேரடியாக மனு அளித்து பயன்பெறலாம் ஜூன் 12ல் பரமத்தி வேலூர், 15ல் பள்ளிபாளையம், 19ல் திருச்செங்கோடு, 26ல் ராசிபுரம் என மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகங்களில் காலை 11 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு முட்டைகள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினந்தோறும் சந்தையில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்லில் 4.60 பைசாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறது .விலை உச்சத்திலிருந்து முட்டை விலை கணிசமாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்தது. இந்நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், நாமக்கல் நகராட்சியில் வழக்கம் போல இன்று பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே-2024ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொது விநியோகத் திட்ட பொருட்களை பெற்றுக் கொள்ள இயலாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கான ஒதுக்கீட்டினை ஜூன்-2024 ஆம் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இன்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கத்திரி வெயில் காலக்கட்டத்தில் கோடைமழை பரவலாக பெய்தது. இதனால் வெயிலின் பிடியில் சிக்கி தத்தளித்த மக்கள், குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையைக் கண்டு நிம்மதியடைந்தனர். அதன்பிறகு வெயிலின் தாக்கம் குறைந்தாலும், புழுக்கம் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று நாமக்கல்-சேலம் சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் அவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
Sorry, no posts matched your criteria.