India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்பு மாணவிகள் சோ்க்கை சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 26 மாணவிகள் சோ்க்கை பெற்றனா். வணிகவியல், பொருளியல் துறைகளுக்கு முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
மத்திய இணைச் இணைய அமைச்சராக டாக்டர் எல்.முருகன் இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகரத்தின் சார்பாக நாமக்கல் நகரத் தலைவர் சரவணன் டெல்லிக்கு இன்று நேரில் சென்று டாக்டர் எல்.முருகன் அவர்களை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி துவக்க நாளான, அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று மிட்டாய் கொடுத்து வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தங்கராஜ் மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் பங்கேற்றனர். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என, மாணவ மாணவியரை இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
நாமக்கல் ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மாணவ மாணவியர் நலம் பெறும் வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும், பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு திட்ட முகாமானது, நாமக்கல் மாவட்டத்தில் 17 பள்ளிகளில் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற உள்ள இந்த முகாமின் மூலமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன் பெற உள்ளனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா மனு அளிக்க வந்திருந்த, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வின் போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஐந்து தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என, மொத்தம் ஏழு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2023-24ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அ.பாலப்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், எலச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு ஒன்று வழங்கினர். அதில் எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறம் ,அரசு நூலகம் நிலம் அரசு பெயரில் இருந்தது. ஆனால் தற்போது அது தனியார் பெயரில் பட்டா இருப்பதை ரத்து செய்து ,மீண்டும் அரசு பெயரில் அரசு நூலக நிலத்தை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் வேதாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி (20). இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் தனியார் கல்லூரிக்கு எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் ,சகோதரி சௌமியாவுடன் சென்றார். அப்பொழுது எதிரே வந்த கார் மோதியதில், சகோதரிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை ஆனங்கூர் பகுதி கிளைகள் சார்பில் கிளை கூட்டம் நடைபெற்றது.கிளைச்செயலாளர்கள் சூர்ய பிரகாஷ், தமிழ்ச்செல்வன்மற்றும் ,சி.என்.முருகேசன் ,தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து, போராட்டங்களை மேற்கொள்வது அதற்கான திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில் 1,420 பேரும், குமாரபாளையம் தாலுகாவில் 606 பேரும், மோகனூரில் 431 பேரும், ப.வேலூரில் 1,008 பேரும், ராசிபுரத்தில் 2,630 பேரும், சேந்தமங்கலத்தில் 856 பேரும், திருச்செங்கோட்டில் 2,186 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 10,137 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Sorry, no posts matched your criteria.